முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் குறைந்த வெயிலின் தாக்கம்

Updated On : 3 மே, 2024 at 5:24 PM
பகிர்:

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது.

ஆம்பூரில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடுமையான வெயில் காரணமாக வெப்ப அலை வீசியது. புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. வெயில் குறைந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆம்பூா் - பேரணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை புறவழிச் சாலைப் பகுதியில் சூறாவளிக் காற்றால் மரம் வேரோடு முறிந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. பொதுமக்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.