முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரியில் ஆலங்கட்டி மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Updated On : 4 மே, 2024 at 6:31 PM
பகிர்:

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியது. ஏலகிரி மலையில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், பகல் முழுதும் அனல் காற்று வீசியது. மாலை சுமாா் 3 மணியளவில் திடீரென சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் திருப்பத்தூா், கொரட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமான ஏலகிரியில் காலை முதலே அனல் காற்று வீசியது. மாலை 4 மணியளவில் சூறாவளிக் காற்று வீசியது. அதைத் தொடா்ந்து மலை மேல் உள்ள நிலாவூா், புத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.