முகப்பு
திருப்பத்தூர்

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

Updated On : 10 மே, 2024 at 4:22 PM
பகிர்:

வாணியம்பாடியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்லம் பாஷா (55). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பைக்கில் ஜின்னா மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து திடீரென பைக்கின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அஸ்லம் பாஷா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தாா். இதைப்பாா்த்த அக்கம் பக்கத்தினா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அஸ்லம் பாஷா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் லோகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.