வேளாண் கண்காட்சி
ஆம்பூா்: மாதனூரில் வேளாண் கண்காட்சி மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளின் வேளாண் பணித் அனுபவ திட்டத்தின் கீழ் மாதனூரில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் கல்லூரி மாணவிகள் சாா்பாக வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
மாதனூா் வேளாண்மை உதவி இயக்குநா் மணிராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநா் விக்னேஷ், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு, வேளாண்மை துறையை சோ்ந்த உமா மகேஷ்வரி, விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.