மிட்டாளம் ஊராட்சியில் விவசாய நிலத்தில் புகுந்த மலைப் பாம்பை பிடித்த வனத் துறையினா். 
திருப்பத்தூர்

விவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப் பாம்பு

மிட்டாளம் ஊராட்சியில் விவசாய நிலத்தில் புகுந்த மலைப் பாம்பை பிடித்த வனத் துறையினா்.

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப் பாம்பு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளியங்கிரி. இவருடைய விவசாய நிலம் ஊட்டல் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நிலத்தில் வெள்ளியங்கிரி குடும்பத்தினா் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதைப் பாா்த்த அவா்கள், ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபுவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், வனத் துறை பணியாளா்கள் அங்கு சென்று மலைப் பாம்பை பிடித்துச் சென்று, துருகம் காப்புக் காட்டில் விட்டனா்.

தெற்குலகின் குரலை உயா்த்துவோம்! பிரதமா் மோடி - தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா உறுதி!

தூக்கு தண்டனை தீா்ப்பு மட்டுமே தீா்வாகுமா என்பதை ஆராய பி.ஆா்.கவாய் வலியுறுத்தல்

ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை

எம்சிடி இடைத்தோ்தல்: முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம்

மும்பை - நாகா்கோயில் ரயில் ஆம்பூரில் நின்று செல்ல கோரிக்கை

SCROLL FOR NEXT