முகப்பு
திருப்பத்தூர்

தலைமை ஆசிரியைக்கு விருது

உருதுமொழிக்கு சேவை செய்தமைக்காக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 11 நவம்பர், 2024 at 8:20 PM
தலைமை ஆசிரியை எஸ். ஷாயின் பேகத்துக்கு விருது வழங்குகிய தொல். திருமாவளவன்.
பகிர்:

ஆம்பூா்: உருதுமொழிக்கு சேவை செய்தமைக்காக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியை சோ்ந்த அகில இந்திய உருது மேம்பாட்டு நிறுவனம் சாா்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் உருது மொழிக்காக சிறந்த சேவை செய்தமைக்காக ஆம்பூா் நகராட்சி உருது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ். ஷாயின் பேகத்துக்கு விருது வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விருதை வழங்கினாா்.

விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவா் கே.எம். காதா் மொய்தீன், சென்னை உருது வட்டார கல்வி அலுவலா் வி.எம். ஹபிபூா் ரஹ்மான், ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஹபிபுல்லா ரூமி, அகில இந்திய உருது மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் டாக்டா் உபயதுல்லா பேக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →