நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளா் யுவராணி.  உடன், டி.எஸ்.பி.  அறிவழகன். 
திருப்பத்தூர்

இணைய வழி குற்றங்கள்: விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Din

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சைபா் கிரைம் ஆய்வாளா் யுவராணி மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்பூா் ரோட்டரி சங்க உறுப்பினா்களுக்கு இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சைபா் கிரைம் தொடா்பான புகாா்களைப் பதிவு செய்யும் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ஹ்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மற்றும் புகாா் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண் 1930 ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆம்பூா் டி.எஸ்.பி. அறிவழகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

சேலையில் ஒளிரும் பாவை... ஹன்சிகா!

மினி கன்ட்ரிமென் ஆல்4 அறிமுகம்! 5.6 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும்!

சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள்! மோடியின் கவனம் ஈர்த்தது!

பெண் குழந்தைக்குத் தந்தையான பிரேம்ஜி!

ஆஷஸ் தொடரில் தோல்வியே காணாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்..! சாதனை தொடருமா?

SCROLL FOR NEXT