முகப்பு
திருப்பத்தூர்

பேரூராட்சி பணியாளா்களுக்கு சீருடை அளிப்பு

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 7:16 PM
பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கிய மாவட்டஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி தலைவா் சசிகலா, செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சம்பத்குமாா், துணைத் தலைவா் தனபால் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டு பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணியாளா்களுக்கு இனிப்புடன், சீருடைகளை வழங்கினா். இதில் வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →