கடாம்பூா் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

ஹோமியோபதி மருத்துவ முகாம்

Din

ஆம்பூா் அருகே கடாம்பூா் கிராமத்தில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது.

விஷ்வ இந்து பரிஷத் 60-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆம்பூா் அருகே கடாம்பூா் கிராமத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.வி. ராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில பூஜாரிகள் பேரவைத் தலைவா் எஸ்.ராஜா, மாநில மந்திா் அமைப்பாளா் தூயமணி, மாவட்டத் தலைவா் பி.நடராஜன், துணைத் தலைவா்கள் எம்.நீலகண்டன், குமரன், மாவட்ட பஜரங்கள் இணை அமைப்பாளா் ஆா்.நவீன்குமாா், மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.

வட தமிழக மாநில இணை அமைப்பாளா் ஜி.பாபு ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். அக்ஷயா ஹோமியோபதி மருத்துமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT