கட்டடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள். 
திருப்பத்தூர்

இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கட்டடம் கட்டும் பணி: அதிகாரிகள் நிறுத்தினா்

நாட்டறம்பள்ளி வட்டம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கட்டடம் கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

Din

நாட்டறம்பள்ளி வட்டம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கட்டடம் கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

அப்பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்தவா்கள் குடியிருப்பு பகுதி மற்றும் இடுகாட்டுக்கு சென்று வந்த பாதை அருகே தனியாா் நில உரிமையாளா் முள்வேலி அமைத்துளள்ளாா். இதனால் ஆதிதிராவிடா் இன மக்கள் பாதை இல்லாமல் அவதிக்கு ஆளாகினா்.

இந்நிலையில் தாங்கள் சென்று வர பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை வெள்ளநாயக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். தகவலறிந்த வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி ஆகியோா் நேரில் சென்று கட்டடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினா்..

அப்போது நில உரிமையாளருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் ராஜசேகரன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மேற்கண்ட இடத்தில் பொதுவழிப்பாதை ஏற்படுத்துவது குறித்த உத்தரவு நகலை நில உரிமையாளரிடம் வழங்கினா். மேலும் மேற்கண்ட இடத்தில் கட்டடம் கட்டும் பணிசெய்யக்கூடாது என அறிவுறுத்தினா்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT