முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பள்ளி ஆசிரியா் தற்கொலை

திருப்பத்தூர்

அரசுப் பள்ளி ஆசிரியா் தற்கொலை

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:40 PM
பகிர்:

திருப்பத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் சின்ன கடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் குப்பன்(54). இவா், குனிச்சி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரின் மனைவி மீனாகுமாரி சீரங்கப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியா். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களாக குப்பன் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவரது மனைவி மீனாகுமாரி அளித்த புகாரின் பேரில்,திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →