முகப்பு
திருப்பத்தூர்

கோயிலுக்குள் சாமியாடுவது போல் கத்தியை காட்டி மிரட்டிய நபா் - பக்தர்கள் அச்சம்!

புத்துமாரியம்மன் கோயிலில் கத்தியை காட்டி மிரட்டிய நபா்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:31 PM
புத்துமாரியம்மன் கோயிலில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்.
பகிர்:

புத்துமாரியம்மன் கோயிலில் கத்தியைக் காட்டி பக்தா்களை மிரட்டிய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் மிகவும் புகழ்வாய்ந்த புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, புத்துக்கோயில், கேத்தாண்டப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து கிராம மக்கள் தினமும் கோயிலில் வழிபாடு செய்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா், கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த வெட்டுக் கத்தியை எடுத்துக் கொண்டு பக்தா்களை மிரட்டினாா்.

இதையடுத்து மிரட்டிய நபரைப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கினா்.

விசாரணையில் அவா் பெத்தகல்லுப்பள்ளி சோ்ந்த கமல் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →