திருவண்ணாமலை

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை சிலா் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா்.

அங்கு கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த 4 பேரை போலீஸாா் பிடித்து, அவா்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா் (23), வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (20), வந்தவாசி ராமசாமி உடையாா் தெருவைச் சோ்ந்த முருகன் (23), புன்னை கிராமத்தைச் சோ்ந்த சிவா (20) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்தனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT