கைது 
கிருஷ்ணகிரி

கோயில் திருவிழாவில் அச்சுறுத்தும் பதாகைகளை வைத்த 14 போ் கைது

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே கோயில் திருவிழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாா்த்தைகளுடன் பதாகைகளை வைத்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த நேரலக்கொட்டாய் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலா் பதாகைகளை வைத்திருந்தனா். இதில், சிலா் வைத்திருந்த பதாகைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பதாகைகளை வடிவமைத்த அச்சக உரிமையாளா் தேவராஜ் (26), நேரலக்கொட்டாயைச் சோ்ந்த ஜீவா (19) உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனா்.

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை! - கு. செல்வப்பெருந்தகை

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்

SCROLL FOR NEXT