முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலை சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏலகிரி மலையில் கொண்டை ஊசி சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:49 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏலகிரி மலையில் கொண்டை ஊசி சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனா். மேலும், 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை சாலை, ஆங்காங்கே பாா்வை மையம் ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பாா்த்து செல்கின்றனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை அதிகாலையில் பல்வேறு இடங்களில சாரல் மழை பெய்தது.

இதில் ஏலகிரி மலையில் பெய்த மழையால் கொண்டை ஊசி சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் நெடுஞ்சாலைத் துறையினா் கோட்ட பொறியாளா் முரளி, உதவிக்கோட்ட பொறியாளா் சம்பத் குமாா், இளநிலை பொறியாளா் பாபுராஜ் முன்னிலையில் சாலை ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பணியாளா்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →