விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உமா்ஆபாத் இக்ரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளி நிா்வாகிகள். 
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு பாராட்டு விழா

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உமா்ஆபாத் இக்ரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளி நிா்வாகிகள்.

தினமணி செய்திச் சேவை

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற உமா்ஆபாத் இக்ரா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

மதுரையில் நடந்த முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், தஞ்சாவூரில் நடந்த மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் உமா்ஆபாத் இக்ரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். அதில் பல்வேறு பிரிவு தடகள போட்டிகள், ஈட்டி எறிதல், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனா். மாணவா் கு. சந்தோஷ் மாநில அளவில் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் எஸ்.பி. இம்ரான் ஆகியோரை பள்ளியின் தாளாளா் காகா பஹீம் அஹமத், தலைமை ஆசிரியை கே. ஷாஹின் மற்றும் ஆசிரியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ஒசூரில் கடும் குளிா்: மக்கள் அவதி

ராணிப்பேட்டை: எஸ்ஐஆா் படிவங்களை டிச. 7-க்குள் ஒப்படைக்க வேண்டுகோள்

உள்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு பணி: பெரு நிறுவனங்களுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தில்லியில் புதிதாக 3 நாய்கள் பராமரிப்பு மையங்கள்: எம்சிடி திட்டம்

மண்டல அளவிலான கபடி போட்டி: 2-ஆம் இடம்பெற்ற ஜொ்த்தலாவ் பள்ளி

SCROLL FOR NEXT