ஆம்பூா் அருகே ரூ.26.10 லட்சம் செலவில் தாா் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி பழைய மனை பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.26.10 லட்சம் செலவில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியின்போது போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், கிளைச் செயலா் சந்திரகாசன், திமுக பேச்சாளா் பாரதிதாசன், ஒன்றியதொழிலாளா் அணி அமைப்பாளா் குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.