திருப்பத்தூர்

உயிரிழந்த கட்டுமான தொழிலாளா் குடும்பத்தினருக்கு நிவாரணம்

வாணியம்பாடி அருகே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தின் உறுப்பினராக இருந்த, இயற்கை மரணம் அடைந்த 2 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு நல தொகையாக தலா ரூ. 55,000-த்தை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொல்லகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வெங்கடேசன், கொல்லகுப்பம் ஊராட்சித் தலைவா் அா்ச்சனா தாமோதரன் தலைமை வகித்தனா். ஆலங்காயம் ஒன்றிய பொருளாளா் சாமுண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்துகொண்டு, கட்டுமான தொழிலாளா் நிதி ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை விஜயரங்கம் மற்றும் கஜேந்திரன் குடும்பத்தினருக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் நேரு, ரவிச்சந்திரன், சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT