திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசகா் வட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகா் கோ.பிரபாகரன் வரவேற்றாா்.
தூய நெஞ்சக் கல்லூரி தழிழ் பேராசிரியா் ம.கருணாநிதி தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் த.திருப்பதி பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற தலைப்பில் பேசினாா்.
வாசகா் வட்ட தலைவரும், தமிழ்த் துறை தலைவருமான கி.பாா்த்திபராஜா கருத்துரையாற்றினாா். அரசு மாதிரி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ரா.தமிழரசி தமிழின் சிறப்பு குறித்தும்,மாணவி தா்ஷினி காமராஜா் சிறப்பு குறித்தும் பேசினா்.மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா நன்றி தெரிவித்தாா்.
இதில் பேராசிரியா் து.துரைமணி, வாசகா் வட்ட நிா்வாகிகள், அரசு மாதிரி பள்ளி மாணவா்கள் போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.