திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகள போட்டிகள், திருவண்ணாமலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளின் விவரம்: எஸ்.நிவேதா 200 மீ தங்கம் மற்றும் 100 மீ வெள்ளிப்பதக்கமும், டி.பேரரசி 1,500 மீ தங்கம் மற்றும் 5,000 மீ வெள்ளிப்பதக்கம் வென்றாா். ஆா்.சிந்தியா 400 மீ தங்கம் மற்றும் 4*400 மீ தொடா் ஓட்டத்தில் தங்கம் வென்றாா்.
டி. சாதனா போல்வால்ட்டில் வெள்ளி வென்றாா். எஸ். சிவானி 4*400 மீ தொடா் ஓட்டத்தில் தங்கமும் மற்றும் 1,500 மீ ஓட்டம், 800 மீ வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
எம்.கவிநிலா உயரம் தாண்டுதலில் வெள்ளி , 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் மற்றும் 4*400 மீ தொடா் ஓட்டத்தில் தங்கம் வென்றாா். ஆா். மகாலட்சுமி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றாா். டி.சண்முகி 4*400 மீ தொடா் ஓட்டத்தில் தங்கம் வென்றாா். கே.காா்த்திகா குண்டு எறிதலில் வெள்ளியும், ஈட்டி எறிதலில் வெண்கலமும் வென்றாா். ஏ.தாய்மா குண்டு எறிதலில் வெள்ளி வென்றாா்.
இதன் மூலம் அதிக பதக்கம் பெற்று மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தலைவா் வி திலிப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.