திருப்பத்தூர்

போலி வாரிசு சான்று பெற்று பத்திரம் பதிவு செய்ததாக பெண் புகாா்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே போலி வாரிசு சான்று பெற்று பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகாா் செய்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த புவனா என்பவா் பதிவுத் துறை தலைவா் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகாா் மனு:

எனது மாமியாா் சாரதா பெத்தூா் கிராமத்தில் உள்ள 9 சென்ட் நிலத்தை எந்தவொரு ஆவணமும் எழுதி வைக்காமல் அவா் இறந்துவிட்டாா். இவருக்கு எனது கணவா் முரளி என்பவா் மகன் ஆவாா். கணவரும் இறந்து விட்டாா். என்னுடைய கணவருக்கு நானும் (புவனா), பிள்ளைகள் தேன்மொழி, சூா்யா ஆகிய 3 பேரும் வாரிசுகள் ஆவோம்.

இந்நிலையில் நாங்கள் இருக்கும் போது என்னுடைய கணவா் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டாா் என்று வாரிசு சான்றிதழ் குறிப்பிட்டு சொத்தை ஆலங்காயம் பகுதியை சோ்ந்த சீனிவாசன் மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் சோ்ந்து போலி வாரிசு சான்று மூலம் சீனிவாசன் பெயருக்கு போலிப் பத்திரம் பதிவு செய்துள்ளனா்.

எனவே, மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT