நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
முத்தனப்பள்ளி டோல்கட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி போலீஸாா் டோல்கேட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் . அப்போது போலீஸாரை கண்டதும் மண் கடத்தலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் மண் தோண்ட பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண் கடத்தலில் ஈடுபட்டதாக தங்கமணி, மோகன், சாரதி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.