திருப்பத்தூர்

மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி சாலம்மாள் (75). வாணியம்பாடியில் பூ வியாபாரம் செய்து விட்டு திங்கள்கிழமை ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்தாா். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த வெலதிகாமணிபெண்டா பகுதிக்கு செல்லும் மினி பேருந்தில் ஏற முயன்றாா். இதில் திடீா் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மினி பேருந்தின் பின்புறம் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் மோகன் என்பவரை கைது செய்தனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT