பலி 
நாகப்பட்டினம்

பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு விரைவுப் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் பேருந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகை நகரப் போலீஸாா் இளைஞா் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (30) என்பது தெரிய வந்தது. வேளாங்கண்ணியில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்த சந்திரசேகரன், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT