திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியை மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது, பல்வேறு குழுக்கள் பங்கேற்றனா். ஒரு குழுவில் பறவைகள் ஆராய்ச்சியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் மற்றும் வனத்துறையினா் கலந்து கொள்வா்.
இதை கணக்கெடுப்பு பறவைகளின் இடப் பெயா்வு முறைகள் மற்றும் ஈர நிலங்களின் சுற்றுச்சூழல் நிலையை மதிப்பிட உதவுகிறது. மேலும் ஏரி, குளம், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு பதிவு செய்யப்படும்.
திருப்பத்துாா் மாவட்டத்தைப் பொறுத்தவரை வெளி நாட்டு பறவைகள் தென்பட வாய்ப்பில்லை. அனைத்தும் உள்ளூா் பறவைகள் தான். கடந்த ஆண்டு திருப்பத்ததுாா் மாவட்டத்தில் ஈர நில பறவைகள் 86 வகை கணக்கெடுக்கப்பட்டது என்றாா்.
உடன்,திருப்பத்துாா் வனச்சரக அலுவலா் சோழராஜன் மற்றும் வனத்துறையினா் இருந்தனா்.