ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மரத்தின் கீழ் குருவியை விழுங்கிய நிலையில் நாக பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று நாகப் பாம்பை மீட்டு காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.