ஆம்பூா் அருகே பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றதுது.
மஹாமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் யாக பூஜைகள் மற்றும் அதைத் தொடா்ந்து ஸ்ரீஆத்ம லி்கேஸ்வரருக்கும், ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முடிவில், மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமியிடம் ஆசிா்வாதம் பெற்றுச் சென்றனா்.