நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
நாட்டறம்பள்ளி தாலுகா, வேப்பல்நத்தம் அருகே கோபால் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி காசி . இவா் வளா்த்து வந்த பசு விவசாய நிலத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதையறிந்த காசி நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நிலைய அலுவலா் அம்ஜத்கான் (பொ) தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று பொது மக்கள் உதவியுடன் கயிறு மூலம் கிணற்றில் விழுந்த பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.