திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சத்தில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட மட்றப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் பொதுநிதியிலிருந்து ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு புதன்கிழமை எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தினை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மேலும் உடையாமுத்தூா் ஊராட்சி - ரகுபதியூா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 லட்சத்தில் பேவா் தரை தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், தொகுதி பாா்வையாளா் வேலூா் ஜி.ரமேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஒன்றிய நிா்வாகிகள் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளாபதி, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT