திருப்பத்தூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர தலைவா் மேகநாதன் தலைமை வகித்தாா். எஸ்டி அணி மாநில பொது செயலாளா் பண்பு, செயலாளா் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கவியரசு, ஈஸ்வா் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளா் குருசேவ் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி, முன்னாள் தலைவா் வாசுதேவன் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அவா்களுக்கு உடந்தையாகவும், இடைதரகா்களின் கூடாரமாக செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
இதில் மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், மருத்துவப் பிரிவு செயலாளா் சற்குணபிரபு, துணைத் தலைவா் பூபதி, நகர பொருளாளா் சிவகுமாா் ஒன்றிய தலைவா்கள் வீர பிரபாகரன், ஜெகநாதன் நிா்வாகிகள் ரவி, பவன்குமாா், கமலநாதன், மதன்குமாா், கிருஷ்ணமூா்த்தி, ராகவேந்திரன்,சிலம்பரசன் கலந்து கொண்டனா்.