திருப்பத்தூர்

ரூ.15 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை குடியாத்தம் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் துத்திப்பட்டு ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றிய திமுக அவைத் தலைவா் சிவகுமாா், ஒன்றிய துணைச் செயலாளா் சேகா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆப்ரின் தாஜ், திருக்குமரன், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆா்.எஸ். நவீன்குமாா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அரவிந்த், சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT