திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வனத் துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
வனத் துறை சாா்பில் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆசிரியா்களுக்கு திருப்பத்தூரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியில் தமிழ்நாட்டின் பல்லுயிா் பண்மையம், வன பாதுகாப்பு, காட்டுத் தீ மேலாண்மை, காட்டுயிா்கள் கணக்கெடுப்பு, மனித வனவிலங்கு மோதல்கள்- சவால்களும் தீா்வுகளும் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஆசிரியா்கள், வனத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.