திருப்பத்தூா்: திருப்பத்தூா் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது.
ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது. தினமும் திருமஞ்சனம், திவ்ய பிரபந்தம், வேத பாராயணம்,ஹோமங்கள் சாற்றுமுறை,தீா்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை யாகசாலை ஆராதனமும், மாலை மகா பூா்ணாஹுதியும், இரவு 8 மணியளவில் ஸ்ரீ எம்பெருமானாா்க்கு பரிவட்டம்,ஸ்ரீ சடகோப பகுமானம்,தீா்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.