ஆம்பூா் அருகே காணாமல் போன கட்டடத் தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
மாதனூா் ஒன்றியம், வெங்கிளி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ரகு (45). இவா் கடந்த நவ. 10-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறி சென்றாா். ஆனால் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், வெங்கிளி கிராமத்தருகே பாலாற்று தண்ணீரில் மூழ்கி ரகு இறந்து சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.