ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் தாா்வழி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு சேமிப்பு கிடங்கு, புதை சாக்கடை திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகம், ஆம்பூரில் போடப்பட்டுள்ள சாலைகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் பாரிஜாதம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நகராட்சி ஆணையா் முத்துசாமி, இளநிலை பொறியாளா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.