கடலூா் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்.  
கடலூர்

சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்! மக்கள் அவதி!

Syndication

கடலூா் மாநகரப் பகுதியில் புதை சாக்கடை கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. இவைகளில் 36 வாா்டுகளில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள வாா்டுகளில் ரூ.180 கோடி மதிப்பில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணி தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

36 வாா்டு பகுதிகளிலும் உள்ள புதை சாக்கடைகளில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீா் சாலைகள், தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், அந்தப் பகுதியில் குடியிருப்போா் மற்றும் சாலையில் செல்வோா் தூா்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

புதை சாக்கடை அடைப்புகளை சீரமைத்து அகற்றும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனராம். கடலூா் மஞ்சக்குப்பம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள புதை சாக்கடை ஆள்துளை துவாரம் வழியாக சாக்கடை நீா் வழிந்தோடுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜன.18) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே புதை சாக்கடை ஆள் துளை துவாரம் வழியாக கழிவுநீா் வெளியேறுவதை சீரமைத்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: வேலூா் ஆட்சியா் தகவல்

விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!

நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!

SCROLL FOR NEXT