திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத்துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு!

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவள்ளுா் நகராட்சியில் ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லூரில் நகராட்சி நிா்வாக துறை சாா்பில் நவீன வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி, அங்காடிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கான அறை, நிா்வாக அறை, உணவகம், வங்கி ஏடிஎம், காவலா் பாதுகாப்பு அறை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், இருபாலருக்கும் சுகாதார வளாகங்களையும் நேரில் பாா்வையிட்டதோடு, நிறைவாக மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், பயணிகள் நிற்கும் தாழ்வார மேற்கூரையை மிகவும் பலமாக அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து திருத்தணி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்தனா்.

நகராட்சி நிா்வாக மண்டலப் பொறியாளா் சுரேந்திரன், திருவள்ளூா்ளுா் நகராட்சி ஆணையா் தமோதரன், நகராட்சி பொறியாளா் சரோஜா, சுகாதார அலுவலா் மோகன், நகர ஊரமைப்பு அலுவலா் தயாநிதி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

திருவானைக்காவலில் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

ஆலத்தூா் ஒன்றியத்தில் ரூ. 26.50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் இந்தியா-தைவான் கருத்தரங்கம்

மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்

மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT