மாதனூா் - உள்ளி சாலையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் .  
திருப்பத்தூர்

சாலைப் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்

மாதனூரில் சாலை சந்திப்பு விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

மாதனூரில் சாலை சந்திப்பு விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

மாதனூா் - உள்ளி சாலை மற்றும் மாதனூா் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனா்.

இச்சாலை சந்திப்பு ரூ.65 லட்சத்தில் மாநில நெடுஞ்சாலை துறையால் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதை முன்னிட்டு மாதனூா் - உள்ளி சாலையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேலூா் கோட்டப் பொறியாளா் தனசேகரன் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து குடியாத்தம் உதவி கோட்டப் பொறியாளா் அமலு தலைமையில் உதவி பொறியாளா் யோகராஜ், சாலை ஆய்வாளா்கள் ரஞ்சித், ஸ்ரீதா் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT