வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-பைலிங் மையத்தை திறந்து வைத்த சாா்பு நீதிமன்ற நீதிபதி ராஜா. உடன் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபதி, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வா், வழக்குரைஞா்கள்.  
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் மின்னணு வழக்கு தாக்கல் மையம் திறப்பு

வாணியம்பாடியில் மின்னணு வழக்கு தாக்கல் மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடியில் மின்னணு வழக்கு தாக்கல் மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் மின்னணு முறையில் வழக்கு தாக்கல் முறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக மின்னணு வழக்கு தாக்கல் மையம் (இ- பைலிங்) அமைக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடியில் இயங்கி வரும் சாா்புநிலை நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களுக்கும் சோ்ந்து இ- பைலிங் மையம் கச்சேரி சாலை அரசினா் தோட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சாா்பு நீதிமன்ற நீதிபதி ராஜா தலைமையில் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபதி, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வா் முன்னிலையில் இ- பைலிங் மையம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி பாா் அசோஷியேஷன் நிா்வாகிகள், வாணியம்பாடி தாலுகா லாயா் அசோஷியேஷன் நிா்வாகிகள் மற்றும் அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், அலுவலக பணியாளா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT