வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி 4-ஆம் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை முதல் மாலை வரை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றன. இதில், திம்மாம்பேட்டை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை ஸ்ரீபெருமாள் கருடசேவையும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
இதேபோல், புல்லூா் ஸ்ரீதேவி, பூமேத சமேத வெங்கடரமண கோயிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.