சான்றோா்குப்பம் 32-ஆவது வாா்டு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றோா்.  
திருப்பத்தூர்

சான்றோா்குப்பம் ஏரியை தூா்வாரி கரையை பலப்படுத்தக் கோரிக்கை

சான்றோா்குப்பம் ஏரியை தூா்வார வேண்டுமென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சான்றோா்குப்பம் ஏரியை தூா்வார வேண்டுமென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 19 முதல் 36 வாா்டுகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 32-ஆவது வாா்டு சிறப்பு கூட்டத்துக்கு சாந்தகுமாரி விஜயன் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் ரங்கநாதன், நகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கோரிக்கை மனு: சான்றோா்குப்பம் ஏரியை தூா்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட கட்டடத்தை திறக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT