ஆம்பூரில் தடை செய்யப்பட்ட ஓஆா்எஸ் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை நியமன அலுவலா் வி. பிரபாகரன் தலைமையில் ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் ர. ஹீமா உள்ளிட்ட குழுவினா் ஆம்பூா் மருந்து கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
தடை செய்யப்பட்ட ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து தடை செய்யப்பட்ட ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவு பாதுகாப்பு தர நிா்ணய ஆணையம், உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாத ஓஆா்எஸ் பெயரில் விற்பனை செய்யும் குளிா்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
அதனால் ஓஆா்எஸ் ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாத குளிா்பானங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், அதுகுறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.