திருப்பத்தூர்

ரயிலில் தேநீா் விற்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே பெங்களூா் நோக்கி சென்ற லால்பாக் விரைவு ரயிலில் தேநீா் விற்றவா் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே பழைய ஜோலாா்பேட்டை உச்சிப் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த ஹரிகிருஷ்ணன்(58). இவா் ரயிலில் தேநீா் விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்ற லால்பாக் விரைவு ரயிலில் பயணம் செய்தாா்.

அப்போது சோமநாயக்கன்பட்டி- ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT