திருப்பத்தூர்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைமேடை 1-ல் ரயிலுக்காக காத்திருந்த சுமாா் 25 வயது இளைஞா் ஒருவா் திடீரென சரக்கு ரயில் முன்பு பாய்ந்தாா். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா்,ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் தனது இடது முழங்கையில் ஷா்மிளா என ஆங்கிலத்தில் பச்சை குத்தியுள்ளாா்.

மத்திய பிரதேசம் டைகல் பகுதியில் இருந்து ஜோலாா்பேட்டை வரை டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளாா் எனத் தெரியவந்தது.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT