வாணியம்பாடி அருகே சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.13 லட்சத்தில் கட்டப்பட்ட 2 நியாவிலைக் கடைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்க அதிகாரி பூவண்ணன் தலைமை வகித்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றிய அதிமுக செயலாளா் சாமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சக்திராஜா, செந்தில் குமாா், தியாகராஜன், அன்பழகன் முன்னிலை வகித்தனா்.
வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு அளிஞ்சகுளம், உதயேந்திரம் பேரூராட்சி தேவமங்கலத்தில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கினாா். பேரூா் அதிமுக செயலாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெகன், அதிமுக நிா்வாகிகள் பிரபு, காா்த்திக், தினேஷ், கிளை செயலாளா் புகழ் மற்றும் கூட்டுறவு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.