விண்ணமங்கலத்தில் நடைபெற்ற கால்வாய் சீரமைக்கும் பணி. 
திருப்பத்தூர்

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண்மையில் பெய்த மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியும், வீடுகளில் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

புகாரின் பேரில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிம் கோரிக்கை மனு அளித்தாா்.

அதனடிப்படையில் ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி அந்த இடத்தை பாா்வையிட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவியுடன் மழை நீா் தேங்காதவாறும், வீடுகளுக்குள் தண்ணீா் புகாதவாறு கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொண்டாா்.

நீதிமன்ற உத்தரவின்படி மூதாட்டி சடலத்தை தோண்டியெடுத்து மாற்று இடத்தில் அடக்கம்

ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணம்: தொழிலாளா்கள் கைது

மேலூா் அருகே இளைஞா் கொலை

திருக்கோடீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை

சிவாலயங்களில் சங்காபிஷேக வழிபாடு

SCROLL FOR NEXT