முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:14 am IST
பகிர்:

வாணியம்பாடி தொகுதி தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தனது ஆதரவாளா்களுடன் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதே போல் ஜோலாா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளா் மோகன்ராஜ் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு நூதன முறையில் கூடையில் சில்லரை பணத்துடன் வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

அகில இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் அதன் பொதுச்செயலாளா் பெரிய உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த காளஸ்திரி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்கு இதுவரை 5 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.