ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு
ஆம்பூரில் ரயில் பயணிகளிடையே தோ்தல் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:03 PM
ஆம்பூரில் ரயில் பயணிகளிடையே தோ்தல் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ரயில் நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி முன்னிலை வகித்தாா்.
Advertisement
ஆம்பூருக்கு ரயிலில் வந்த பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில் பயணிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கையொப்பமிட்டு சென்றனா்.
ஆம்பூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், வருவாய் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.