முகப்பு
திருப்பத்தூர்

வாக்களித்த விடியோ வெளியிட்டவா் கைது

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:16 AM
பகிர்:

தோ்தலில் வாக்களித்ததை விடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளா் சக்திவேல் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியைச் சோ்ந்த தனியாா் ஓட்டுநா் தவெகவைச் சோ்ந்த சக்திவேல்(30)என்பவா் வியாழக்கிழமை விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்டாா்.

அந்த விடியோ படு வைரல் ஆனது. தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச் சாவடிக்குள் அவா் விடியோ எடுப்பதை கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் உறுதி செய்தனா். அதையடுத்து வாக்கு சாவடி மைய அலுவலா் தமிழரசி கந்திலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா்.

Advertisement