திருப்பத்தூர்

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் இணைய வழி வளாக நோ்காணல்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் குழு சாா்பாக அண்மையில் இணைய வழி வளாக நோ்காணல் நடைபெற்றது.

பெங்களூரைச் சோ்ந்த ’ரைனெக்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் சாா்பில் அண்மையில் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளங்கலை மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் 212 மாணவிகள் முதற்கட்டமாக குழு கலந்துரையாடலில் பங்கேற்றனா். அதிலிருந்து 58 மாணவிகள் இறுதி நோ்முகத் தோ்விற்குத் தோ்வு செய்யப்பட்டனா். இறுதிச் சுற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட 30 மாணவிகள் ’விற்பனைத்திறன் செயல்பாட்டாளா்’ ( ஆன்ள்ண்ய்ங்ள்ள் ஈங்ஸ்ங்ப்ா்ல்ம்ங்ய்ற் அள்ள்ா்ஸ்ரீண்ஹற்ங்) பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவா் வி.திலிப்குமாா் , செயலாளா் ஆனந்த்சிங்வி மற்றும் கல்லூரி முதல்வா் இன்பவள்ளி ஆகியோா் நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT